Posts

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
 உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வதைத் தவிர அதிகமாகப் பேசவேண்டாம் ஏனேனில், அதிகப் பேச்சு உள்ளத்தின் கடினத் தன்மையையும், உணர்வற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. மக்களில் அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் தூரமானவன் கடினமான உள்ளம் உடையவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
பிறருடைய உலக ஆதாயத்துக்காகத் தனது மறுமையை நஷ்டமடையச் செய்பவனே மனிதர்களில் மிகத் தீயவன். மற்றவர்களுக்கு உலக லாபங்கள் கிடைப்பதற்காக, அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்யும் காரியத்தைச் செய்து, தன்னுடைய மறு உலக நன்மையை இழந்தவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ) இந்தச் சமுதாயத்தின் மீது நான் அதிகமாகப் பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்'' (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர், யாரஸூலல்லாஹ், நான் சில வேளைகளில் ஏதேனுமொரு நற்காரியம் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை நாடிச் செய்ய எண்ணுகிறேன். அத்துடன் மனதில் மக்கள் என் அமலைக்காண வேண்டுமென்ற ஆசையும் பிறக்கிறது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டு மௌனமாக இருந்தார்கள், சிறிது நேரத்தில் கீழ்காணும் ஆயத் இறங்கியது (فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا) எவர் தன் இரட்சகனைச் சந்திப்பதை ஆசைப்படுகிறாரோ, (அவனுடைய நேசனாக விரும்புகிறாரோ) அவர் நல் அமல் செய்து வரவும், மேலும் தன் ரப்புடைய இபாதத்தில் யாரையும் இணையாக ஆக்க வேண்டாம்''. (தப்ஸீர் இப்னுகஸீர்) தெளிவுரை:- இந்த ஆயத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க், முகஸ்துதியாகும். மேலும் அமல் அல்லாஹுதஆலாவுக்காக இருந்தாலும், அத்துடன் ஏதேனுமொரு மனோ இச்சையும் சேர்ந்து இருந்தால், அதும் ஒருவகையான மறைமுகமான ஷிர்க்கே! இதும் மனிதனுடைய அமலை வீணாக்கிவிடுகிறது. (தப்ஸீர் இப்னுகஸீர்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஆம்! எவனொருவன் நன்மை செய்கிறவனாயிருக்கும் நிலையில் தன்னை (முற்றிலும்) அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கிறானோ, அவனுக்கு அவனுடைய (நற்) கூலி அவனுடைய ரப்பிடம் இருக்கிறது; (அத்தகைய)வர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்பகரா:112) அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். (அல்பகரா:272)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ) தானம் கொடுத்ததின் பேரில் அவர்களின் உள்ளம் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில் கொடுப்பவர்கள் என்ற இந்த ஆயத்தின் கருத்து, மது அருந்துபவர்கள், திருடுபவர்களா?'' (பாவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் பயப்படுகிறார்களா?) என நான் கேட்டேன். சித்தீக்கின் மகளே, இதுவல்ல கருத்து, ஆயத்தின் கருத்து, அவர்கள் நோன்புவைத்து, தொழுது, தானதர்மங்கள் செய்பவர்கள். ஆனால், அவர்கள் (ஏதேனுமொரு தீவினையின் காரணமாக) தங்களது நல்ல அமல்கள் ஏற்கப்படாமல் போய்விடுமோ என்பதை பயப்படக் கூடியவர்கள், இவர்கள் தாம் விரைவாக நன்மைகளைச் சேர்க்கின்றவர்கள், இவர்கள் தாம் அந்த நன்மைகளின் பக்கம் முன்னேறுபவர்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (திர்மிதீ)தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஒரு முஃமின் அடியானுக்குப் பிரியமானதை அல்லாஹுதஆலா அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள, அவர் அதைப் பொறுத்துக் கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தவராக, அவருக்குக் கட்டளையிடப்பட்ட (اِنَّالِلّهِ وَاِنَّا اِلَيهِ رَاجِعُوْنَ) என்று கூறினால், அவருக்கு, சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலன் அளிப்பதை அல்லாஹுதஆலா விரும்பமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நஸாயீ)