Posts

Showing posts from March, 2017

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
 உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வதைத் தவிர அதிகமாகப் பேசவேண்டாம் ஏனேனில், அதிகப் பேச்சு உள்ளத்தின் கடினத் தன்மையையும், உணர்வற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. மக்களில் அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் தூரமானவன் கடினமான உள்ளம் உடையவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
பிறருடைய உலக ஆதாயத்துக்காகத் தனது மறுமையை நஷ்டமடையச் செய்பவனே மனிதர்களில் மிகத் தீயவன். மற்றவர்களுக்கு உலக லாபங்கள் கிடைப்பதற்காக, அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்யும் காரியத்தைச் செய்து, தன்னுடைய மறு உலக நன்மையை இழந்தவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ) இந்தச் சமுதாயத்தின் மீது நான் அதிகமாகப் பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்'' (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர், யாரஸூலல்லாஹ், நான் சில வேளைகளில் ஏதேனுமொரு நற்காரியம் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை நாடிச் செய்ய எண்ணுகிறேன். அத்துடன் மனதில் மக்கள் என் அமலைக்காண வேண்டுமென்ற ஆசையும் பிறக்கிறது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டு மௌனமாக இருந்தார்கள், சிறிது நேரத்தில் கீழ்காணும் ஆயத் இறங்கியது (فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا) எவர் தன் இரட்சகனைச் சந்திப்பதை ஆசைப்படுகிறாரோ, (அவனுடைய நேசனாக விரும்புகிறாரோ) அவர் நல் அமல் செய்து வரவும், மேலும் தன் ரப்புடைய இபாதத்தில் யாரையும் இணையாக ஆக்க வேண்டாம்''. (தப்ஸீர் இப்னுகஸீர்) தெளிவுரை:- இந்த ஆயத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க், முகஸ்துதியாகும். மேலும் அமல் அல்லாஹுதஆலாவுக்காக இருந்தாலும், அத்துடன் ஏதேனுமொரு மனோ இச்சையும் சேர்ந்து இருந்தால், அதும் ஒருவகையான மறைமுகமான ஷிர்க்கே! இதும் மனிதனுடைய அமலை வீணாக்கிவிடுகிறது. (தப்ஸீர் இப்னுகஸீர்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஆம்! எவனொருவன் நன்மை செய்கிறவனாயிருக்கும் நிலையில் தன்னை (முற்றிலும்) அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கிறானோ, அவனுக்கு அவனுடைய (நற்) கூலி அவனுடைய ரப்பிடம் இருக்கிறது; (அத்தகைய)வர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்பகரா:112) அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். (அல்பகரா:272)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ) தானம் கொடுத்ததின் பேரில் அவர்களின் உள்ளம் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில் கொடுப்பவர்கள் என்ற இந்த ஆயத்தின் கருத்து, மது அருந்துபவர்கள், திருடுபவர்களா?'' (பாவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் பயப்படுகிறார்களா?) என நான் கேட்டேன். சித்தீக்கின் மகளே, இதுவல்ல கருத்து, ஆயத்தின் கருத்து, அவர்கள் நோன்புவைத்து, தொழுது, தானதர்மங்கள் செய்பவர்கள். ஆனால், அவர்கள் (ஏதேனுமொரு தீவினையின் காரணமாக) தங்களது நல்ல அமல்கள் ஏற்கப்படாமல் போய்விடுமோ என்பதை பயப்படக் கூடியவர்கள், இவர்கள் தாம் விரைவாக நன்மைகளைச் சேர்க்கின்றவர்கள், இவர்கள் தாம் அந்த நன்மைகளின் பக்கம் முன்னேறுபவர்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (திர்மிதீ)தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஒரு முஃமின் அடியானுக்குப் பிரியமானதை அல்லாஹுதஆலா அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள, அவர் அதைப் பொறுத்துக் கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தவராக, அவருக்குக் கட்டளையிடப்பட்ட (اِنَّالِلّهِ وَاِنَّا اِلَيهِ رَاجِعُوْنَ) என்று கூறினால், அவருக்கு, சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலன் அளிப்பதை அல்லாஹுதஆலா விரும்பமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நஸாயீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் முஙீரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களின் பாதங்கள் வீங்கும் வரை நீண்ட நேரம் நின்று தொழுவார்கள்.அல்லாஹ் தங்களது முன் பின் பாவங்களை (நிகழ்ந்து இருந்தாலும்) மன்னித்துவிட்டானே!' (ஏன் இவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்?) என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது''. நான் நன்றியுள்ள அடியானக ஆகவேண்டாமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (புகாரி இந்த ஹதீஸை ஒவ்வொரு முஸ்லிம் ஆண் /பெண் இருபாலாரும் சிந்திக்கவேண்டும்! அவரவர்கள் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும்! ''நான் உண்மையாக அல்லாஹ்வுக்கு நல்ல அடியானாக இருக்கிறேனா? நன்றியுள்ள அடியானாக நடக்கின்றேனா? அல்லாஹ்வின் விசாரணைக்கு முன். நம்மை நாமே விசாரித்துக்கொள்ளவேண்டும்! எல்லோருக்கும் முடிவு தான் ரொம்ப முக்கியம் !

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
 எவர் நல்ல முறையில் உளூச் செய்து தொழுகையில் உள்ளத்தை முழுமையாக ஈடுபடுத்தி உறுப்புகளையும் அமைதியாக வைத்து இரண்டு ரக்அத் தொழுவாரோ, அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கடமையாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூதாவூத்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழும்போது ஒவ்வொரு இரு ரக்அத்தின் இறுதியிலும், தஷஹ்ஹுத்' ஓதுங்கள். தன் இயலாமையை வெளிப்படுத்திப் பணிவுடனும் தாழ்மையுடனும் அமைதியாகவும் தொழுங்கள். தொழுது முடித்த பின், தம் இருகைகளையும் உள்ளங்கை முகத்தை நோக்கியவாறு இருக்க நெஞ்சுவரை உயர்த்தி தமது இரட்சகனிடத்தில் துஆச் செய்யுங்கள். (யாரப்பி, யாரப்பி) இரட்சகனே! இரட்சகனே!' என்று சொல்லி துஆச் செய்யுங்கள். இவ்வாறு செய்யாதவரின் தொழுகை (நன்மை, மற்றும் கூலியின் அடிப்படையில்) குறையுள்ள தொழுகையே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபழ்லுப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்ச முடையவரே” என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை” என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள், புகாரி : 3490

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
“என் சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வர், என்னை மறுத்தவர் தவிர” என்று நபியவர்கள் கூறியபோது, “அல்லாஹ்வின் தூதரே, யார் மறுத்தவர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “யார் எனக்குக் கீழ்ப்படிந்தவரோ அவர் சொர்க்கம் செல்வார். யார் எனக்கு மாறுசெய்தாரோ, அவர் மறுத்தவர் ஆவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)  

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
நபியவர்கள் கூறினார்கள்: யார் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். யார் எனக்கு மாறுசெய்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். யார் நான் நியமித்த ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவாரோ, அவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். யார் அவருக்கு மாறுசெய்கிறாரோ, அவர் எனக்கு மாறுசெய்தவராவார். (ஸஹீஹுல் புகாரீ, சுனன் நசாயீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஒருவரை அடக்கம் செய்து விட்டு அவருக்குப் பிராத்தனை புரியுமாறு நபியவர்கள் வேண்டுவார்கள் அதைக் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது. ஒரு ஜனாஸாவை அடக்கிய பின்பு நபியவர்கள் அங்கே நிற்பார்கள் பின்னர் ‘உங்களுடைய சகோதரருக்குப் பாவமன்னிப்பைக் கேளுங்கள், அவருக்கு உறுதியைக் வேண்டுங்கள் இப்போது அவர் விசாரிக்கப்படுகின்றார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம் : அபூதாவுத் 3223

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
இன்பங்களைத் தகர்க்கக் கூடியதை அதிகமாக நினைவுகூறுங்கள்’ என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம் : திர்மிதி 2307 கரடு முரடான உள்ளங்களையும் இலக வைக்கும் தன்மை மரணத்திற்குண்டு. வாழ்வின் யதார்த்தம் புரியாமல் ஆங்காங்கே வந்து செல்லும் சந்தோசங்களை நிரந்தரம் என நம்பி விடக் கூடாது. மரண சிந்தனையை அவ்வப்போது வரவழைத்துக் கொள்வது மறுமையை நினைவுபடுத்தும். அது நம்மை சரியான திசையின் பால் வழிநடாத்திச் செல்லும் எனவேதான் கப்ர்களை தரிசிக்கும்படி இஸ்லாம் பணித்துள்ளது.

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இறையச்சம்: உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஹானி ஆதாரம்: அஹ்மத் 454

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢  ஒருவர் நற்செயல்கள் செய்கிறார், அதனால் மக்கள் அவரைப் புகழ்கின்றனர். அவருக்கு அந்த நற்செயலின் கூலி கிடைக்குமா? மக்கள் அவரைப் புகழ்வது முகஸ்துதியில் சேராதா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இது முஃமினுக்கு உடனடியாக கிடைக்கின்ற நற்செய்தி'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) தெளிவுரை:- ஹதீஸின் கருத்து, ஒரு நற்செய்தி மறுமையில் கிடைக்கக் கூடியது, மற்றோன்று, மக்கள் இவரைப் புகழ்வதன் மூலம் உலகில் கிடைக்கக் கூடியது. அவருடைய எண்ணம் அல்லாஹுதஆலாவின் திருப்திக்காகவே என்று இருக்க வேண்டும், அவருடைய நற்செயல் புகழப்படும் நோக்கமாக இல்லையென்றால் அவர் விரும்பாமல் மக்களால் புகழப்படுவது அவருக்கு உலகில் கிடைக்கும் உடனடியான நற்செய்தி என்பதாம்.

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
 நீங்கள் அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தை நாடி எதைச் செலவு செய்தாலும், அதனுடைய நன்மை உங்களுக்கு நிச்சயமாகக் கொடுக்கப்படும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் கவளத்திற்கும்'' (உங்களுக்கு நன்மை கிடைக்கும்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் இறந்துவிட, அவர் அல்லாஹுதஆலாவிடம் நன்மையை ஆதரவு வைத்தால் உறுதியாக அவர் சொர்க்கம் சென்றுவிடுவார்'' என்று அன்ஸாரிப் பெண்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, அவர்களில் ஒரு பெண்மணி, யாரஸூலல்லாஹ், இரு பிள்ளைகள் இறந்துவிட்டால்?'' எனக் கேட்டார்.  இருபிள்ளைகள் மரணித்தாலும் இதே நன்மை கிடைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
எவரேனும் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பத்தில் சிக்குண்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ) 135.எந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினான சகோதரருக்குப் பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்குக் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஹம்மதிப்னு அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா) --

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஒரு முஸ்லிம் தன் முஸ்லிம் சகோதரருக்காக அவர் இல்லாத பொழுது கேட்கும் துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது. துஆச் செய்பவரின் தலைக்கு அருகில் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தன் சகோதரரின் நன்மைக்காக துஆச் செய்யும் பொழுதெல்லாம் அந்த மலக்கு ஆமீன்'' கூறுகிறார். மேலும் நீர் உமது சகோதரனுக்காக எந்த நலவை வேண்டுகிறீரோ, அதுபோன்ற நலவை அல்லாஹுதஆலா உமக்கும் தந்தருள்வானாக! (என்று துஆச் செய்பவரிடம் கூறுகிறார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுவார்கள் என ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
எவர் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய பொருளை பறித்துக் கொள்வாரோ, அவர் மீது அல்லாஹுதஆலா நரகத்தைக் கட்டாயமாக்கிச் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது யாரஸூலல்லாஹ், அது அற்பமான பொருளாக இருந்தாலுமா? (இந்தத் தண்டனை கிடைக்கும்?) என்று ஒருவர் வினவினார், உஹா மரத்தின் ஒரு கிளையாக இருந்தாலும் சரியே!'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) சிலர் அமர்ந்திருந்த சமயம், நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அருகில் வந்து நின்றவாறு, உங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று வினவினார்கள். ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) மௌனமாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே மூன்று முறை கேட்டார்கள், யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று அறிவித்துத் தாருங்கள்' என்று ஒருவர் கேட்டார், எவரிடம் நற்செயலை ஆதரவு வைக்கப்படுமோ, மேலும் தீயது ஏற்படும் என்ற பயமும் இல்லையோ அவரே உங்களில் நல்லவர், எவரைக் கொண்டு நற்செயலை ஆதரவு வைக்க முடியாதோ, தீங்கு ஏற்படும் என்ற பயம் எந்நேரமும் இருக்குமோ, அவரே உங்களில் தீயவர்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
(விசுவாசி) கள்ளம் கபடமற்றவராகவும், கண்ணியமானவராகவும் இருப்பார், பாவியோ, ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்) தெளிவுரை:- சூழ்ச்சி, தந்திரம், போன்றவை முஃமினுடைய இயற்கைச் சுபாவமாக இருக்காது. தனது இயற்கையான உயர் குணத்தைக் கொண்டு மக்களுக்கு சிரமம் கொடுப்பது, அவர்களைப் பற்றித் தவறாக எண்ணுவது போன்றவைகளைவிட்டும் முஃமின் விலகியிருப்பார். அதற்கு மாற்றமாகப் பாவியின் இயல்பே ஏமாற்றுவதும் சதி மோசடி செய்வதும், குழப்பமுண்டாக்குவதும் அவனது வழக்கமாகும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.  (தர்ஜுமானுஸ்ஸுன்னா)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியதாக எவ்வாறு ஆகும்?'' என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டுத் தவ்பா செய்தால் அல்லாஹுதஆலா அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான், ஆனால், எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புறம் பேசியவனுக்கு மன்னிப்புக் கிடையாது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஃத் மற்றும் ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும்போது, இந்த இரண்டு கப்ராளி (புதை குழியில் உள்ளவர்)களும் வேதனை செய்யப்படுகிறார்கள், (தவிர்ந்து கொள்வது சிரமமான) பெரும் பாவத்தின் காணரமாக வேதனை செய்யப்படவில்லை. ஆயினும், இருவரில் ஒருவர் சிறுநீர்த் துளிகள் உடலில் படுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளாமலிருந்தவர், மற்றவர் கோள் சொல்லித் திரிந்தவர்'' என்று சொன்னார்கள். (புகாரி)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
எவரைப் பார்த்தால் அல்லாஹுதஆலாவின் நினைவு வருமோ அவரே அல்லாஹுதஆலாவின் சிறந்த அடியார், கோள் சொல்பவர்கள், நண்பர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்குபவர்கள், மேலும், அல்லாஹுதஆலாவின் பரிசுத்த அடியார்களை ஏதேனும் பாவத்தில், அல்லது சஞ்சலத்தில் ஆழ்த்திவிட முயற்சிப்பவர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களில் தீயவர்கள் ஆவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு ஙன்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபூலைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சியைச் சொன்னார்கள். ஒரு முறை அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவருக்குத் தூக்கம் வந்து தூங்கிவிட்டார். இன்னோருவர் விளையாட்டாக அவருடைய கயிற்றை எடுத்துக்கொண்டார், தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்ததும், தன் கயிற்றைக் காணாது பதற்றமடைந்தார். எந்த ஒரு முஸ்லிமும் பிற முஸ்லிமைப் பதற்றமடையச் செய்வது கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢 நாசமாக்கக் கூடிய ஏழு பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய போது, யாரஸூலல்லாஹ், அந்த ஏழு பாவங்கள் யாவை''? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். 1. அல்லாஹுதஆலாவுக்கு இணைவைத்தல், 2. சூனியம் செய்தல், 3. அநியாயமாகக் கொலை செய்தல், 4. வட்டிப் பொருளைச் சாப்பிடுதல், 5. அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், 6. (தன் உயிரைக் காக்க) போரிலிருந்து படையினரை விட்டுப் புறமுதுகிட்டு ஓடிவிடுதல், 7. பரிசுத்தமான ஈமான் உள்ள-தீயவைகளை அறியாத அப்பாவிப் பெண்கள் மீது விபச்சாரம் புரிந்ததாக அவதூறு கூறுதல்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
பொறாமையை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள், ஏனேனில், தீ விறகைத் தின்றுவிடுவதைப்போல், அல்லது வைக்கோலைத் தின்றுவிடுவது போல், பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

Image
சிந்திக்க சில நபிமொழிகள் ! ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)