தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢





ஹஜ்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர், யாரஸூலல்லாஹ், நான் சில வேளைகளில் ஏதேனுமொரு நற்காரியம் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை நாடிச் செய்ய எண்ணுகிறேன். அத்துடன் மனதில் மக்கள் என் அமலைக்காண வேண்டுமென்ற ஆசையும் பிறக்கிறது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டு மௌனமாக இருந்தார்கள், சிறிது நேரத்தில் கீழ்காணும் ஆயத் இறங்கியது (فَمَنْ كَانَ يَرْجُوْ لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلاَ يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ اَحَدًا) எவர் தன் இரட்சகனைச் சந்திப்பதை ஆசைப்படுகிறாரோ, (அவனுடைய நேசனாக விரும்புகிறாரோ) அவர் நல் அமல் செய்து வரவும், மேலும் தன் ரப்புடைய இபாதத்தில் யாரையும் இணையாக ஆக்க வேண்டாம்''.

(தப்ஸீர் இப்னுகஸீர்)

தெளிவுரை:- இந்த ஆயத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க், முகஸ்துதியாகும். மேலும் அமல் அல்லாஹுதஆலாவுக்காக இருந்தாலும், அத்துடன் ஏதேனுமொரு மனோ இச்சையும் சேர்ந்து இருந்தால், அதும் ஒருவகையான மறைமுகமான ஷிர்க்கே! இதும் மனிதனுடைய அமலை வீணாக்கிவிடுகிறது.

(தப்ஸீர் இப்னுகஸீர்)

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢