தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) சிலர் அமர்ந்திருந்த சமயம், நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அருகில் வந்து நின்றவாறு, உங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று வினவினார்கள். ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபாக்கள் (ரலி) மௌனமாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே மூன்று முறை கேட்டார்கள், யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று அறிவித்துத் தாருங்கள்' என்று ஒருவர் கேட்டார், எவரிடம் நற்செயலை ஆதரவு வைக்கப்படுமோ, மேலும் தீயது ஏற்படும் என்ற பயமும் இல்லையோ அவரே உங்களில் நல்லவர், எவரைக் கொண்டு நற்செயலை ஆதரவு வைக்க முடியாதோ, தீங்கு ஏற்படும் என்ற பயம் எந்நேரமும் இருக்குமோ, அவரே உங்களில் தீயவர்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.

(திர்மிதீ)

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢